1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
  4. IPL-2020 Bangalore win Chennai Kings fight and lose

ஐபிஎல்-2020; பெங்களூர் 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி… சென்னை கிங்ஸ் போராடி தோல்வி…

ஐபிஎல்-2020ம்
2020 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ரசிகர்களுக்கு பரப்பரப்பை ஏற்படுத்துவதுபோல் சுவாரஸ்யமாக போட்டிகள் நடைபெற்று வருவதால் டிஆர்பி ரேட்டிங் கூடுகிறது.

இந்நிலையில் துபாயில் இன்று இரவு 7:30 மணியில் இருந்து தோனி தலைமையிலான சென்னை அணி, கோலி தலைமையிலான  ராயல் சேலஞ்சர்ஸ் ஆப் பெங்களூர் அணியுடன் மோதி வருகிறது.

டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் ஆப் பெங்களூரு பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

சி.எஸ்.கே அணிக்கு 170 ரன்கள் இலக்கு! இப்போட்டியில் முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்துள்ளது அந்த அணியில் கேப்டன் விராட் கோலி 52 பந்துகளில் 90 எடுத்து அவுட்டாகாமல் களத்தில் நின்றார்.

இதையடுத்து அடுத்துக் களமிறங்கிய  சென்னை அணி வீரர்கள் நிதானமாக விளையாடினாலும்  பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட முன்னணி வீரர்கள் சோபிக்கததும், தோனி சொற்ப ரன்கள் ஆட்டமிழந்ததும் அந்த அணி தோற்பதற்காக காரணம்.

இந்நிலையில் 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட் இழப்பிற்கு சென்னை அணி 132 ரன்கள் எடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
அடுத்த கட்டுரையில்
ஐபிஎல்-2020; விளாசிய விராட் கோலி 52 பந்துகளில் 90 ரன்கள்.... சென்னை கிங்ஸ் அணிக்கு 170 ரன்கள் இலக்கு…