ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
Written By Sinoj
Last Modified: சனி, 10 அக்டோபர் 2020 (15:44 IST)

ஐபில்-2020; இன்று சென்னை பெங்களூர் அணிகள் மோதல்… ரசிகர்கள் உற்சாகம் !

2020 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ரசிகர்களுக்கு பரப்பரப்பை ஏற்படுத்துவதுபோல் சுவாரஸ்யமாக போட்டிகள் நடைபெற்று வருவதால் டிஆர்பி ரேட்டிங் கூடுகிறது.

இந்நிலையில் துபாயில் இன்று இரவு 7:30 மணிக்கு நடைபெறும்  மற்றொரு ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை அணி, கோலி தலைமையிலான  ராயல் சேலஞ்சர்ஸ் ஆப் பெங்களூர் அணியுடன் மோதவுள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 24 முறை மோதியுள்ளன. இதில் 15 போட்டிகளில் சென்னை அணியும்,  பெங்களூர் அணி 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு காணப்படவில்லை .

சென்னை அணிக்கு கடும் சவால் கொடுக்கப் போகிற இந்த போட்டியில் தோனி எப்படி தன் அணியின் மீதான விமர்சனத்திற்கு என்ன சொல்லப்போகிறார் என்பது இன்று தெரியும்.