திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
Written By Sinoj
Last Updated : சனி, 10 அக்டோபர் 2020 (21:29 IST)

ஐபிஎல்-2020; விளாசிய விராட் கோலி 52 பந்துகளில் 90 ரன்கள்.... சென்னை கிங்ஸ் அணிக்கு 170 ரன்கள் இலக்கு…

2020 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு நாளும் ரசிகர்களுக்கு பரப்பரப்பை ஏற்படுத்துவதுபோல் சுவாரஸ்யமாக போட்டிகள் நடைபெற்று வருவதால் டிஆர்பி ரேட்டிங் கூடுகிறது.

இந்நிலையில் துபாயில் இன்று இரவு 7:30 மணியில் இருந்து தோனி தலைமையிலான சென்னை அணி, கோலி தலைமையிலான  ராயல் சேலஞ்சர்ஸ் ஆப் பெங்களூர் அணியுடன் மோதி வருகிறது.

டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் ஆப் பெங்களூரு பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

சி.எஸ்.கே அணிக்கு 170 ரன்கள் இலக்கு! இப்போட்டியில் முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்துள்ளது அந்த அணியில் கேப்டன் விராட் கோலி 52 பந்துகளில் 90 எடுத்து அவுட்டாகாமல் களத்தில் நின்றார்.

இதையடுத்து அடுத்துக் களமிறங்கவுள்ள தோனி தலைமையிலான சென்னை அணி ஜெயிக்குமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.