தொடர்புடைய செய்திகள்
- ரஜினி…சாதி,, மத வெறியர்களின் கையில் சிக்காமல் இருப்பதே நல்லது – திருமாவளவன்
- நீங்க வந்து ஒன்னும் மாறாது; பேசாம ரெஸ்ட் எடுங்க! – ரஜினிக்கு சீமான் அட்வைஸ்
- மத்திய அமைச்சர் ஸ்மிர்தி இரானிக்கு கொரொனா தொற்று உறுதி
- 2021ம் ஆண்டில் எத்தனை நாட்கள் அரசு பொது விடுமுறை? அரசு அறிவிப்பு
- 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளின் துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு !
நாளை அரசு விடுமுறை வேண்டும்: சீமான் கோரிக்கை!
நாளை நவம்பர் ஒன்றாம் தேதி தமிழ்நாடு என்ற மாநிலம் அங்கீகரிக்கப்பட்ட நாள் என்பதால் அரசு விடுமுறை என அறிவிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் சீமான் தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை வைத்துள்ளார்
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்திய அரசு 1956 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தை மொழிவாரி மாநிலமாக பிரித்தது. இதன்படி நவம்பர் ஒன்றாம் தேதி தமிழ்நாடு என்கிற நமது தாயக நிலம் இந்திய மத்திய அரசால் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட நிலப்பகுதியானது
பெரும் புகழ் கொண்ட தமிழ்நாடு உருவான நவம்பர் ஒன்றாம் தேதியை தமிழ்நாடு நாடாக அறிவிக்கும் அரசாணையை தங்களது தலைமையிலான தமிழ்நாடு அரசு 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 25 பிறப்பித்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது வரவேற்கத்தக்கது
எனவே தமிழ்நாடு அரசு இத்தகைய பெருமைக்குரிய நாளை அரசு விடுமுறையாக அறிவித்து தமிழர்களின் முன்னோர்களான மூவேந்தர்களின் தமிழ் நாட்டுக் கொடியை மாநிலமெங்கும் அரசு அலுவலங்களிலும் அரசின் துறை சார்ந்த நிறுவனங்களிலும் ஏற்ற வேண்டும் என்று சீமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்
அடுத்த கட்டுரையில்
