1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2019
  4. 198 is the target to Mumbai by Punjab

கே.எல்.ராகுல் அபார சதம்: மும்பைக்கு 198 ரன்கள் இலக்கு

மும்பை
மும்பையில் இன்று நடைபெற்று வரும் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 197 ரன்கள் எடுத்துள்ளது. 
 
கே.எல்.ராகுல் அபாரமாக விளையாடி சதமடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய கிறிஸ் கெயில் 36 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து அசத்தினார். இதில் 7 சிக்ஸர்களும், 3 பவுண்டரிகளும் அடங்கும் இருப்பினும் கெயிலுக்கு பின்னால் வந்த் மில்லர், கே.கே.நாயர், கர்ரன் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களை மட்டுமே எடுத்து தங்கள் விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர்,
 
மும்பை அணியின் பந்துவீச்சாளரான ஹிருத்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். பும்ரா மற்றும் பெஹண்ட்ராப் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இன்னும் சற்று நேரத்தில் 198 என்ற இலக்கை நோக்கி மும்பை அணியினர் விளையடவுள்ளனர். ரோஹித் சர்மா இல்லாத மும்பை அணி இந்த இலக்கை எட்டுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
அடுத்த கட்டுரையில்
கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற மும்பை: பொளந்து கட்டிய பொல்லார்ட்: