ஐபிஎல் போட்டியில் அணி மாறிய வீரர்கள்!

p
Last Modified வியாழன், 17 மே 2018 (14:05 IST)
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டி முடிந்த பின்னர் மும்பை அனியின் பாண்டியாவும், பஞ்சாப் அணியின் ராகுலும் ஜெர்சியை மாற்றிகொண்டனர்.
 
பஞ்சாப்புக்கு எதிரான நேற்றைய போட்டியில் மும்பை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது. 
 
இந்நிலையில், நேற்றைய போட்டிக்கு பின் இரு அணி வீரர்களும் ஒருவரையொருவர் சந்தித்து பேசிக்கொண்டனர். அப்போது நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்காக 94 ரன்கள் எடுத்த ராகுலும், மும்பை அணிக்காக சிறப்பாக பந்துவீசிய பாண்டியாவும் சிறிது நேரம் உரையாடினார்.
s
 
இதனையடுத்து, இருவரும் கால்பந்து போட்டிகளில் வீரர்கள் ஜெர்ச்சிகளை மாற்றிக்கொளவது போல தங்களது ஜெர்சியையும் மாற்றிக்கொண்டனர். இவர்களின் இந்த செயலுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 


இதில் மேலும் படிக்கவும் :