கோலியை கட்டித்தழுவிய கெயில்

k
Last Updated: செவ்வாய், 15 மே 2018 (13:27 IST)
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் கோலியை கட்டி பிடித்து பாசத்தை வெளிபடுத்தினார் கெயில்.  
 
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப்- பெங்களூரு அணிகள் மோதின. இதில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து 88 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் 89 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்றது. 
 
போட்டி முடிந்த பின் பெங்களூரு அணியின் கேப்டன் கோலி, கெயில் வழக்கம் போல் அவர்களது ஸ்டைலில் கட்டி பிடித்து கொண்டனர். கெயிலை பெங்களூர் அணி புறக்கணித்த நிலையில், அண்மையில் கெயில் பெங்களூர் அணியை விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
k
இந்த நிலையிலும் கோலி மீது அவர் வைத்திருக்கும் பாசத்தை கண்டு ரசிகர்கள் வியந்துள்ளனர். 


இதில் மேலும் படிக்கவும் :