வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: வியாழன், 10 மே 2018 (11:02 IST)

‘கோலி சோடா 2’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

தயாரிப்பாளர் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று ‘கோலி சோடா 2’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. 
ஒளிப்பதிவாளரான விஜய் மில்டன் எழுதி, இயக்கி, ஒளிப்பதிவு செய்து, தயாரித்திருக்கும் படம் ‘கோலி சோடா 2’. அச்சு ராஜாமணி இசையமைத்துள்ள இந்தப் படத்தை, தீபக் எடிட் செய்துள்ளார். ஆக்‌ஷன் டிராமா படமாக இது உருவாகியுள்ளது.
 
முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள இந்தப் படத்தில், மிக முக்கியமான கேரக்டரில் சமுத்திரக்கனி நடித்துள்ளார். இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், சிறப்புத்  தோற்றத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படம், வருகிற 18ஆம் தேதி ரிலீஸாவதாக இருந்தது. ஆனால், தயாரிப்பாளர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று ஜூன் 14ஆம் தேதி ரிலீஸ் செய்யப்  போவதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார் விஜய் மில்டன்.