தோனியை புகழ்ந்து தள்ளிய விராத் கோலி

kholi
Last Updated: திங்கள், 7 மே 2018 (12:33 IST)
ஐபில் போட்டிகளில் தோனி சிறப்பாக விளையாடி வருவதாகவும், இது இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு நல்ல அறிகுறி எனவும் விராத் கோலி கூறியுள்ளார்.
இரண்டு வருட தடைக்குப் பின்னர், ஐபிஎல் டி20யின் 11 வது சீசனில் விளையாடி வரும் சென்னை அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். குறிப்பாக சென்னை அணி கேப்டன் சிறப்பாக விளையாடி வருகிறார். இதுவரை சென்னை அணி விளையாடிய 10 ஆட்டங்களில் 7 ஆட்டத்தில் வெற்றி பெற்று பட்டியலில் 2 ஆம் இடத்தில் உள்ளது.
ipl
இதுகுறித்துப் பெங்களூர் அணி கேப்டன் விராத் கோலி,  தோனி சிறப்பாக விளையாடி வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தோனியின் ஆட்டத்தை அனைவரும் விரும்பிப் பார்ப்பார்கள் என்றும் தெரிவித்தார். மேலும் தோனியின் சிறப்பான ஆட்டம் இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு நல்ல அறிகுறி எனக் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :