1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2018
Written By
Last Modified: சனி, 5 மே 2018 (19:47 IST)

சென்னை அணிக்கு த்ரில் வெற்றி - பெங்களூர் அணியை வீழ்த்தியது

இன்று நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

 
புனேவில் நடந்த ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 35-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொண்டது. அதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார்.
 
அதன் பின் ஆடிய பெங்களூர் அணி 9 விக்கெட்டுகள் இழந்து மொத்தம் 127 ரன்கள் எடுத்தது. டிம் சவுத்தி 26 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். எனவே, 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களம்  இறங்கியது. 
 
அதில், தோனி 31 ரன்களும், ராயுடு 32 ரன்களும் குவித்தனர். இறுதியில், 18 ஓவர்களில், 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.