1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2018
  4. Chennai team palying against mumbai team in first ipl match

ஐபிஎல் தொடர் நாளை தொடக்கம்: சென்னை- மும்பை மோதல்

ஐபிஎல் தொடர்
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன.
 
இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதாக கொண்டாடப்படும்  ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-வது சீசன் நாளை  கோலாகலமாக தொடங்கவுள்ளது. இந்த தொடரில் சூதாட்ட புகாரில் சிக்கி 2-வருடங்கள் கழித்து சென்னை அணி மீண்டும் களமிறங்குகிறது.
 
இந்த நிலையில் நாளை நடைபெறும் முதல் போட்டியில் சென்னை அணியும்- மும்பை அணியும் வான்கடே மைதானத்தில் மோதவுள்ளன.
 
இதற்கான தொடக்க விழா நாளை நடைபெற இருக்கிறது. ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க பல நடிகர், நடிகைள் இதில் பங்கேற்கிறார்கள்.
அடுத்த கட்டுரையில்
காமன்வெல்த் போட்டி: இந்தியாவின் இரண்டாவது தங்கமங்கைக்கு குவியும் வாழ்த்துக்கள்