1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2017
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 9 ஏப்ரல் 2017 (12:47 IST)

ஐபிஎல் சூதாட்டம்: மூன்று பேர் கைது; ஹைதராபாத்தில் பரபரப்பு!!

இந்தியாவில் பத்தாவது பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் சில தினங்களுக்கு முன்பு துவங்கியது. 


 
 
இந்நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக ஹைதராபாத் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 
 
இதைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்துள்ளனர். 
 
மேலும் அவர்களிடம் இருந்து ரூ.75,000 பணம், லேப்டாப் மற்றும் மூன்று மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
 
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் துவங்கிய சில தினங்களில் சூதாட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.