செவ்வாய், 11 பிப்ரவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2017
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 31 மார்ச் 2017 (16:04 IST)

ஐபிஎல் போட்டியில் இருந்து ராகுல் விலகல்: அதிர்ச்சியில் பெங்களூர் அணி!!

இந்திய அணியின் தடுப்பாட்ட வீரராக கலக்கி வரும் கே.எல்.ராகுல் ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 
 
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விளையாடி பல சாதனைகளை படைத்து தரவரிசையில் முன்னேற்றம் கண்டார் ராகுல்.
 
இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் எனவும், லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்வதற்காக செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி ஏற்கனவே சில  போட்டிகளில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்ட நிலையில் ராகுலின் முடிவால் தற்போது பெங்களூரு அணியின் நிலைமை கேள்விக் குறியாகியுள்ளது.