ஞாயிறு, 23 பிப்ரவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2017
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (12:20 IST)

அவமான படுத்தியவர்களின் வாய்யை தனது ஸ்டைலில் லாக் செய்த தோனி!!

நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த 17 வது ஐபிஎல் போட்டியில் புனே அணி, பெங்களூரு அணியை எதிர்கொண்டது. 


 
 
ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு முன்னதாகவே புனே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி, அதிரடியாக நீக்கப்பட்டார். தொடரில் தொடக்கம் முதல் தோனியின் பேட்டிங் சரிவர இல்லை. இதானால் பல விமர்சனங்களுக்கு உள்ளானார் தோனி.
 
இந்நிலையில், பெங்களூருக்கு எதிரான போட்டியில் தோனி அடித்த சிக்ஸரால் பந்து ஸ்டேடியத்தின் மேல்கூரைக்கு பறந்து விட்டது. அந்த பந்தை எடுக்க முடியாமல், புதிய பந்து பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதேபோல், ஆபத்தான டிவில்லியர்ஸ் ஒரு கட்டத்தில் இறங்கி அடிக்க உஷாரான தோனி அசால்ட்டாக ஆபத்தான டிவில்லியர்ஸை அவுட்டாக்கினார். 
 
தொடர்ந்து 4 போட்டிகளில் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்த தோனி, இந்த போட்டியில் அதற்கு ஒரு சின்ன புல் ஸ்டாப் வைத்து விமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.