1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2017
  4. de Villiers says Mumbai Indians would win IPL cup

ஐபிஎல் கோப்பை இவர்களுக்கு தான்: டிவிலியர்ஸ்!!

ஐபிஎல்
நடந்து வரும் ஐபிஎல் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என பெங்களூரு வீரர் டிவிலியர்ஸ் தெரிவித்துள்ளார்.


 
 
ஐபிஎல் போட்டியில் 40 லீக் போட்டிகள் முடிந்து விட்ட நிலையில்,  இத்தொடரில் இருந்து பெங்களூர் முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேறியது.
 
இந்த அணியின் நட்சத்திர வீரரான டிவிலியர்ஸ், கோப்பையை கைப்பற்றும் அணியை கணித்துள்ளார். 
 
இது குறித்து டிவிலியர்ஸ் கூறியதாவது, எதிர்பாராத விதமாக இந்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் தொடரில் எங்கள் அணியால் சிறப்பாக செயல்பட முடியாமல் போனது. இனி எதையும் மாற்ற முடியாது. மும்பை அணி இந்த ஆண்டு கோப்பை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக நான் கருதுகிறேன் என டிவிலியர்ஸ் கூறினார்.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற புனே. சொந்த மண்ணில் கொல்கத்தா சோகம்