டெல்லி அணிக்கு ஆறுதல் வெற்றி. ஐதராபாத் அணியை வீழ்த்தியது
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று டெல்லி மைதானத்தில் டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகள் மோதியது. இதுவரை விளையாடிய எட்டு போட்டிகளில் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த டெல்லி அணி இன்று ஐதராபாத் அணியை 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆறுதல் வெற்றியை பெற்றது.
டாஸ் வென்று முதலில் பீல்டிங் செய்ய டெல்லி அணி முடிவெடுத்ததால் ஐதராபாத் அணி முதலில் களமிறங்கியது. யுவராஜ் சிங் அதிரடியாக அடித்த 70 ரன்களால் இந்த அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 185 ரன்கள் குவித்தது.
186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 189 ரன்களை எடுத்தது. ஆண்டர்சன் 24 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.