தோனி தலைமையில் சிஎஸ்கே: ஆர்பரிப்பில் ஐபிஎல் ரசிகர்கள்!!
தோனி தலைமையில் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் போட்டியில் களமிறங்கும் என்று ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதலாக, இந்திய அளவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற பெயரில் சென்னையை சேர்ந்த கிரிக்கெட் அணி, மகேந்திர சிங் தோனி தலைமையில் களமிறங்கி ஆடி வந்தது.
இந்நிலையில், 2013 ஆம் ஆண்டு ஊழல் புகார் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கும் என்றார். மேலும், ‘இந்த அணிக்கு, தோனியே கேப்டனாக இருப்பார் என்று ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் கடத்த ஐபிஎல் போட்டிகளில் பங்குபெறாததால் மக்கள் மத்தியில் ஐபிஎல் தொடர் முன்பு போல பிரபலமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.