செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இந்திய வகைகள்
Written By Sasikala

அட்டகாசமான சுவையில் மசாலா பாஸ்தா செய்ய !!

தேவையான பொருட்கள்:
 
பாஸ்தா - 250 கிராம்
வெங்காயம் - 5
புதினா - கால் கட்டு
கொத்தமல்லி - கால் கட்டு
கறிமசால் தூள் - ஒரு பாக்கெட்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - சிறிது
கடுகு - சிறிதளவு

செய்முறை: 
 
முதலில் பாஸ்தாவை கொதிக்கும் நீரில் போட்டு 10 - 15 நிமிடம் வேக வைக்கவும். ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும். பின் வடிகட்டி குளிர்ந்த நீர் ஊற்றி  வைக்கவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு பொரிய விடவும். 
 
பொரிந்ததும் பொடியாக நறுக்கின வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் கறிமசால் தூள் சேர்த்து வதக்கவும். தேவையான அளவு உப்பையும்  சேர்க்கவும்.
 
மசாலா பச்சை வாசனை போனவுடன் வேகவைத்துள்ள பாஸ்தாவையும் சேர்த்து கிளறவும். மூடி சிம்மில் வைத்து 10 - 15 நிமிடம் வரை வேகவிடவும். நடுவே அவ்வப்போது கிளறி விடவும்.

நன்கு வெந்தவுடன் பொடியாக நறுக்கின கொத்தமல்லி, புதினா சேர்க்கவும். நன்றாக கிளறி இறக்கவும். சுவையான மசாலா பாஸ்தா  தயார்.