புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

அரிப்பு ஏற்படாமல் இருக்க தவிர்க்க வேண்டிய உணவுகள் !!

உணவு பழக்க வழக்கங்கள் கூட அரிப்பை அதிகரிக்கலாம். பசும்பால் மற்றும் முட்டைகள் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். மேலும் சாப்பிட வேண்டிய உணவுகள் கீழே பின்வருமாறு.

சிக்கன் சூப்: சிக்கன் சூப் அரிப்பு ஏற்பட்டால் சாப்பிடுவது நல்லது. சிக்கன் சூப் அரிப்பு ஏற்படாமல் தடுக்க மற்றும் குடி போதையில் இருந்து வெளியேற உதவுகிறது. அரிப்பு ஏற்படாமல் தடுக்க உதவும் அமினோ அமிலம் உதவுகிறது.
 
மீன் எண்ணெய்: மீன் எண்ணெயில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இரத்த அழுத்தம் மற்றும் வீக்கத்தை  குறைக்கிறது.
 
வாழைப்பழம்: வாழைப்பழத்தில் பொட்டாசியம், ஹிஸ்டமைன், ஊட்டச்சத்துக்கள், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இவை தோல் மேல் ஏற்படும்  அரிப்பை தடுக்கிறது.
 
விதைகள்: பூசணிக்காய் விதைகள், எள்ளு போன்ற விதைகளில் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. உடலில் ஏற்படும் அழற்சியை எதிர்த்து போராட கொழுப்பு அமிலங்கள் உதவுகிறது.
 
காய்கறிகள்: சுத்தமான காய்கறிகள் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கிறது. காய்கறிகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தோல் அழற்சியை தடுக்கிறது.
 
அரிப்பு ஏற்படாமல் இருக்க சாப்பிட கூடாத உணவுகள்: எண்ணெய்யில் பொறித்த உணவுகள், முட்டை, இறைச்சி, மீன் போன்ற உணவுகள் சாப்பிடுவதால் அரிப்பு ஏற்படுகிறது. இந்த உணவுகளை தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியம்.