1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Prasanth Karthick
Last Modified வெள்ளி, 17 மார்ச் 2023 (11:18 IST)

கால்சியம் சத்து அள்ளி வழங்கும் 6 முக்கிய உணவுகள்..!

Calcium Foods
உடலில் எலும்புகள், பற்கள் உறுதியாக இருக்க கால்சியம் சத்து மிகவும் அவசியமானது. கால்சியம் சத்து செறிந்த உணவுகளை சாப்பிடுவது பல நோய்களில் இருந்து காக்கும்.

உடலில் எலும்புகள் மற்றும் பற்களை உறுதிப்படுத்த மட்டுமல்லாமல், நரம்பு மண்டலம், இதயம் மற்றும் செரிமான அமைப்பு சரியாக செயல்படவும் கால்சியம் அவசியம்.
 
  • பால் மற்றும் பால் பொருட்களில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. 250 மி.லி பாலில் 300 மி.கி கால்சியம் உள்ளது.
  • ஒரு கப் பாதாம் பருப்பில் 300 மி.கி அளவுக்கு கால்சியம் உள்ளது. பாதாம் பருப்பை ஊற வைத்தோ, நேரடியாகவோ சாப்பிடலாம்.
  • தயிரில் இருந்து 350 மி.கி வரை கால்சியம் சத்து கிடைக்கிறது. நறுக்கிய பழங்கள், நட்ஸ் உடன் தயிரை கலந்து சாப்பிடலாம்.
  • எள்ளு விதைகளில் கால்சியம் சத்து செறிவாக உள்ளது. சாலட் போன்றவற்றில் எள் பயன்படுத்தலாம். எள் உருண்டை உடலுக்கு வலுவை அளிக்கும்.
  • ஒரு கப் சுண்டலில் 420 மி.கி கால்சியம் சத்து கிடைக்கிறது. சுண்டலை அவித்தோ, குழம்பில் சேர்த்தோ சாப்பிடலாம்.
  • பாரம்பரிய சிறுதானிய உணவான கேழ்வரகில் 100 கிராமில் 345 மி.கி கால்சியம் கிடைக்கிறது. வாரத்தில் நான்கு முறை கேழ்வரகு சாப்பிட்டால் எலும்புகள் வலுவாகும்.