திங்கள், 25 செப்டம்பர் 2023
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 30 மே 2023 (10:01 IST)

வெயில் காலத்தில் எதையெல்லாம் செய்யவே கூடாது?

தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் ஒரு பக்கம் வெயில் வாட்டி வருவதுடன், பல்வேறு சீசன் வியாதிகளும் வருகின்றன. வெயிலின் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?அதிகமான வெயிலில் கால் தெரியும்படியான காலணிகளை அணிந்து செல்வதை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் கால்கள் வெளியே தெரியும் பகுதி அதிகம் கருத்து போவதுடன் கால் அழகையும் பாதிக்கும்.

வெயில் காலங்களில் அதிகம் தண்ணீர் குடுப்பது நல்லது. ஆனால் வெவ்வேறு தண்ணீரை குடிப்பது உடல் பிரச்சினைய தரலாம். எனவே, வெளியே செல்லும்போது எப்போதும் உடன் தண்ணீர் பாட்டில் கொண்டு செல்வது நலம்.

வெயில் காலங்களில் சூடான காபி, டீ போன்றவற்றை மதிய நேரங்களில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. காபி, டீ போன்றவை பித்தத்தை அதிகரிக்கும் என்பதால் உடல் சூடும் அதிகரிக்கும்.

வெயில் தாக்கத்தை குறைக்க தண்ணீர், நீர் மோர், இளநீர் போன்றவற்றை குடிக்கலாம். இவை உடல் உஷ்ணத்தை குறைப்பதுடன், அடிக்கடி நாவறட்சி, தாகம் ஏற்படாமல் செய்யும்.

வெயிலில் நின்று வேலை செய்பவர்கள் மணி நேரத்திற்கு ஒரு முறை நிழலில் ஓய்வு எடுத்துக் கொள்தல் நலம். வெயிலின் தாக்கம் உடலில் உள்ள சத்துகளை உறிஞ்சி விடும் என்பதால் சிறிது நேர ஓய்வு அவசிய்ம்.

கோடை காலத்தில் காற்றோட்டமான உடைகள், காட்டன் உடைகளை அணிவது நல்லது. இறுக்கமான ஆடைகள் உடல் வியர்வை, துர்நாற்றம் ஏற்படுத்துவதுடன், உடல் சோர்வையும் தரும்.

உச்சி வெயிலில் செல்ல வேண்டிய கட்டாயம் எழுந்தால் குடை, தொப்பி அணிந்து செல்வது நல்லது. இது சூரியனின் ஆபத்தான கதிர்வீச்சுகள், வெப்பத்திலிருந்து நம்மை காக்கும்.