வளரும் குழந்தைகளுக்கு கால்சியம் சத்துக்களை தரும் பேரிக்காய்..!!

பேரிக்காய் உடலுக்கு வலிமை அளிப்பதுடன், சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாகவும் செயல்படுகின்றன. அதிக அளவிலான வைட்டமின் சி சத்துப்பொருட்கள் பேரிக்காயில் நிறைந்துள்ளன. புதிதாக பறித்த 100 கிராம் பழத்தில் 7 சதவீதத்திற்கு வைட்டமின் சி காணப்படுகிறது.
பேரிக்காயில் உள்ள நார்ப் பொருட்கள் குடல் புற்றுநோய்க்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாக பயன்படுகின்றன. இதில் காணப்படும் எளிதில்  கரையாத பாலிசாக்ரைடு மூலக்கூறுகள் குடலில் சேரும் புற்று நோய் நச்சுக்களை அகற்றவல்லது.
 
எலும்புகள், பற்கள் பலப்படும். இதயம் வலுவாகும். இரைப்பை, குடல், பிற ஜீரண உறுப்புகளை பலமாக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
பேரிக்காயை அடிக்கடி உண்ணும்போது நல்ல பசியும் எடுக்கும். ஜீரணமும் நன்றாக ஆகும். வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் ஆற்றல்  பேரிக்காய்க்கு உண்டு.
 
இதயம் பலவீனமாக உள்ளவர்களும், அதிக படபடப்பு உள்ளவர்களும் தினமும் இருவேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இதயப்  படபடப்பு நீங்கும்.
 
சில பெண்களுக்கு தாய்ப்பால் சரியாக சுரப்பதில்லை. இவர்கள் காலையிலும் மாலையிலும் 1 பேரிக்காய் வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். மேலும் வளரும் குழந்தைகளுக்கு கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் அவசியத் தேவை. இந்த சத்துக்கள்  பேரிக்காயில் நிறைந்துள்ளன.


இதில் மேலும் படிக்கவும் :