திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

பொதுவாக இடுப்பு வலி வருவதற்கான காரணங்களும் தீர்வுகளும்...!

நீண்ட நேரம் அமர்ந்து பிரயாணம் செய்யும்போது இடுப்பு வலி ஏற்படும் ஆபத்து அதிகம் உள்ளது. எலும்புகளில் ஏற்படும் சுண்ணாம்புக் குறைவு. சரியாக குணப்படுத்தப் படாத வாயுக் கோளாறு போன்றவைகளால் ஏற்படும்.
நீண்டநேரம் ஒரே நிலையில் நின்றபடி வேலை செய்வதால் இடுப்புவலி வருகிறது. இருக்கையில் நேராக சரியான நிலையில் உட்காராமல் இருப்பது. அதிகமான நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இடுப்பு வலி ஏற்படும்.
 
ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தால் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு இடுப்புவலியால் அவதிப்படுவர். காரணம் இடைவிடாமல் உட்கார்ந்து கொண்டே அமர்ந்திருப்பதுதான்.
 
தடுக்கும் முறைகள்:
 
படுத்திருந்தபடி உங்கள் ஒரு முழங்காலை மடித்து நெஞ்சு வரை கொண்டு செல்வதாகும். முதலில் ஒரு காலில் செய்யுங்கள். பிறகு மற்றக்  காலில் செய்யுங்கள்.  இறுதியாக இரண்டு கால்களையும் சேர்த்துச் செய்யுங்கள். முதுகைப் பிற்புறமாக வளைப்பது மற்றொரு நல்ல  பயிற்சியாகும். இவற்றை தவிர உங்கள் எடையைச் சரியான அளவில் பேணுவது அவசியம்.
 
கணினி வைத்திருக்கும் மேசையை ஏற்றி இறக்கும் வகையில் அமைக்க வேண்டும். அமர்ந்திருக்கும் இருக்கை நன்கு சுழலுமாறும் மேசையின் உயரத்திற்கு தகுந்தவாறும் இருக்கையின் உயரத்தை வைக்க வேண்டும்.
நாள்தோறும் தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். தினசரி உற்சாகமாக உடல் உழைப்புடன் இயங்க வேண்டும்.
 
நாம் வேலைகளில் ஈடுபடும்போதும் பிரயாணம் மேற்கொள்ளும்போதும் தொடர்ந்து உட்கார்ந்து இருக்காமல் ஒரு தடவையாவது எழுந்து  முதுகை நிமிர்த்தி சிறிது தூரம் நடந்து சென்ற பின் மீண்டும் உட்காருவது அவசியம்.
 
நாற்காலியில் அமரும்போது முதுகுப் புறமும் இடுப்புப் பகுதியும் சாய்ந்திருக்குமாறு வசதியாக உட்காருங்கள். நீண்ட நேரம் ஒரே நிலையில் நின்றபடி வேலை செய்வது முதுகின் வளைவிற்குப் ஆபத்தை ஏற்படுத்தும்.