புதன், 1 பிப்ரவரி 2023
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Sinoj
Last Updated: ஞாயிறு, 4 ஏப்ரல் 2021 (00:25 IST)

முட்டைக்கோஸிலும் பேஷியல்.....

முகத்தை பொலிவுடன் வைக்க சிறந்தது முட்டைக்கோஸ் பேஷியல். இந்த பேஷியலை செய்வதற்கு முதலில் காய்ச்சாத பாலால் முகத்தை நன்கு துடைக்க  வேண்டும். 
 
பிறகு முட்டைக்கோஸை பச்சையாக அரைத்து அதில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக பிழிந்து கொள்ளவும். இதன்பின் வடிகட்டி சாறு எடுத்து அந்த சாற்றை  தனியாக வைக்கவும். பின் மசித்த முட்டைக்கோஸை கொண்டு முகத்துக்கு மசாஜ் செய்யவும்.
 
இடையிடையே முட்டைக்கோஸ் சாற்றை விரல்களில் தொட்டுக் கொள்ளவும். இருபது நிமிடங்கள் கழித்து ஈரமான பஞ்சால் முகத்தைத் துடைத்து விடவும். பிறகு  முட்டைக்கோஸ் விழுது, பால் ஒரு ஸ்பூன் மற்றும் தேன் 1 ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து முகத்திற்கு பேக் போடவும். 
 
மீண்டும் 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் முகம் பளிச்சென்று ஜொலிக்கும். இந்த பேஷியலை பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை செய்து கொண்டால் உங்கள் சருமம் ஜொலிப்பதை காணலாம். 
 
அதிக வெள்ளை சர்க்கரை நிறைந்த இனிப்பு பொருள்களை எடுக்க கூடாது. மாறாக இயற்கையில் இனிப்பு நிறைந்த பொருள்களை எடுத்துகொள்ளலாம். பழங்களை சாறாக்கி குடிப்பதை தவிர்த்து அப்படியே சாப்பிடுவது சருமத்துக்கு பொலிவை கொடுக்கும். 
 
தினமும் ஒரு கப் பழத்துண்டுகளை சாப்பிட பழகுங்கள். கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பதும் நல்லது. உணவில் புரதம், இரும்புசத்து,  வைட்டமின் அதிகம் இருக்கும்படி பார்த்துகொள்ளுங்கள். எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது நீர். தினமும் உடலுக்கு தேவையான அளவு நீர்  எடுத்துகொள்வதன் மூலம் சருமத்தில் இருக்கும் நச்சு வெளியேறுவதால் சருமம் எப்போதுமே பொலிவாக இருக்கும்.