திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 22 ஏப்ரல் 2021 (08:46 IST)

அதை மட்டும் செய்யாவிட்டால் விவேக் ஆன்மா ஏற்காது… தமிழிசை அறிவுரை!

அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை உக்கிரதாண்டவம் ஆடிவரும் நிலையில் இந்தியாவில் புதிய உச்சமாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் பல மாநிலங்களும் முகக்கவசம் அணிவதை வற்புறுத்தியும், இரவு நேர ஊரடங்கு மற்றும் தடுப்பூசி விழிப்புணர்வு ஆகியவற்றை முன்னிறுத்தியும் பணிகளை செய்து வருகின்றன.

இந்நிலையில் இப்போது புதுச்சேரியில் பேசியுள்ள ஆளுநர் தமிழிசை ‘கொரோனாவை தடுக்க எளிய வழி முகக்கவசம் அணிவதுதான். அதே போல புதுச்சேரியில் அதிகமாக இருந்த தடுப்பூசி போட்டுக் கொள்வோரின் எண்ணிக்கை நடிகர் விவேக் மரணத்துக்குப் பின்னர் குறைந்துள்ளது. நடிகர் விவேக் விழிப்புணர்வை ஏற்படுத்த ஊசி போட்டு கொண்டார். ஆனால் அவரது மரணத்தை எண்ணி பயந்து ஊசி போடாமல் இருப்பதை அவரது ஆன்மா ஏற்காது. அதனால் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.’ எனக் கூறியுள்ளார்.