வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 22 ஏப்ரல் 2021 (11:35 IST)

காதலுக்கு மறுத்த மாணவி; கொன்று சாக்குப்பையில் கட்டிய காதலன்! – புதுச்சேரியில் கொடூரம்!

புதுச்சேரியில் காதலிக்க மறுத்த மாணவி கொல்லப்பட்டு சுடுக்காட்டில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி சந்தைக்குப்பம் பகுதியை சேர்ந்த ராமன் என்பவரது மகள் ராஜஸ்ரீ. ராஜஸ்ரீ சில வருடங்கள் முன்னதாக 10ம் வகுப்பு படித்து வந்தபோது பிரதீஷ் என்ற இளைஞரோடு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. ஆனால் பிரதீஷ் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததால் அவரிடமிருந்து விலக தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் தற்போது கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வரும் ராஜஸ்ரீயை அடிக்கடி சந்தித்து காதல் குறித்து பேச அழைத்துள்ளார் பிரதீஷ். இதனால் கல்லூரி செல்வதாக கூறிவிட்டு யாருக்கும் தெரியாமல் பிரதீஷுடன் சென்ற ராஜஸ்ரீயை சுடுகாட்டிற்கு அழைத்து சென்றுள்ளார் ப்ரதீஷ். பின்னர் ப்ரதீஷும், அவரது தம்பியும் சேர்ந்து காதலை ஏற்றுக் கொள்ளாத ராஜஸ்ரீயை கொன்று அங்கிருந்த சாக்குப்பை ஒன்றில் வைத்து வீசிவிட்டு சென்றுள்ளனர்.

பின்னர் கொலை வழக்கில் இருந்து தப்பிக்க நினைத்த பிரதீஷ் முன்ஜாமீன் கேட்டு வழக்கறிஞர் ஒருவரை நாட, விவரமறிந்த வழக்கறிஞர் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் ப்ரதீஷ் மற்றும் அவரது சகோதரரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.