திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 7 மார்ச் 2024 (10:51 IST)

வொண்டர் வுமனுக்கு 4வது பெண் குழந்தை..! ஆனாலும் படத்தில் தொடர்ந்து நடிப்பாராம்! – ரசிகர்கள் வாழ்த்து!

Gal Gadot
பிரபல ஹாலிவுட் நடிகை கேல் கெடாட்டுக்கு 4வது குழந்தை பிறந்துள்ள நிலையில் குழந்தையுடன் கேல் கெடாட் உள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.



ஹாலிவுட்டில் வெளியாகி வரும் சூப்பர்ஹீரோ படங்கள் உலகம் முழுவதுமே பிரபலமாக இருந்து வருகின்றன. அந்த வகையில் டிசி காமிக்ஸின் வொண்டர் வுமன் படமும் ரசிகர்களிடையே வெகு பிரபலம். ஸாக் ஸ்னைடர் யுனிவர்ஸில் உருவான இந்த வொண்டர் உமன் படத்தில் ஹாலிவுட் நடிகை கேல் கெடாட் வொண்டர் வுமனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்த கேல் கெடாட் முன்னாள் மிஸ் இஸ்ரேல் அழகியும் கூட. இஸ்ரேல் ராணுவத்தில் சில காலம் பணியாற்றிய பின் அவர் நடிப்பு துறைக்கு வந்தார். 2008ல் திருமணமான கேல் கெடாட் முன்னதாக 2020ல் வொண்டர் வுமன் வெளியான போதே கர்ப்பமாகதான் இருந்தார். அப்போது தனது மூன்றாவது குழந்தையை பெற்றெடுத்தார்.


சமீபத்தில் மீண்டும் கர்ப்பமான கேல் தனது நான்காவது குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இந்த பெண் குழந்தைக்கு ஓரி என ஹிப்ரூ மொழியில் பெயர் வைத்துள்ளார். அதற்கு பொருள் ”எனது ஒளி” என்பதாகும். தற்போது குழந்தையுடன் தனது புகைப்படத்தை கேல் வெளியிட்டுள்ள நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

நான்கு குழந்தைகள் ஆகிவிட்டாலும் தொடர்ந்து நடிப்பேன் என்றும் கேல் கெடாட் தெரிவித்துள்ளதாக தகவல்.

Edit by Prasanth.K