ரிஸ்க் காட்சி படப்பிடிப்பின்போது டாம் குரூஸ் படுகாயம்? ரசிகர்கள் அதிர்ச்சி


sivalingam| Last Modified ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2017 (23:06 IST)
உலகப்புகழ் பெற்ற ஹாலிவுட் ஆக்சன் கிங் டாம் குரூஸ் தற்போத் 'மிஷன் இம்பாஸிபிள்' படத்தின் ஆறாவது பாகத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.


 
 
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு ரிஸ்க்கான இடத்தில் அந்தரத்தில் தாண்டும் காட்சியில் டாம் குரூஸ் நடித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக அவருக்கு காயம் ஏற்பட்டது. ஆனால் நல்லவேளையாக அவருக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படும்நிலை இல்லை
 
உயரமான ஒரு இடத்தில் இருந்து இன்னொரு கட்டிடத்திற்கு தாவும்போது ஸ்லிப் ஆகிவிட்டதாகவும் இருப்பினும் அவர் கட்டிடத்தின் சுவரை பிடித்து கொண்டதால் உயிர் தப்பியதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தற்போது சிகிச்சை பெற்று வரும் டாம் குரூஸ் விரைவில் படப்பிடிப்புக்கு திரும்புவார் என்று கூறப்படுகிறது.

 


இதில் மேலும் படிக்கவும் :