வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 27 ஜூலை 2017 (13:06 IST)

பள்ளியில் ஆபாச பத்திரிகைகளை விற்பனை செய்த பிரபல நடிகர்

நான் ஆபாச பத்திரிகைகளை திருடி பள்ளியில் விற்பனை செய்துள்ளேன் என்று பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பேட்டின்சன் தெரிவித்துள்ளார்.


 

 
ட்வைலைட் சீரிஸ் மூலம் ஹாலிவுட்டில் பிரபலமானவர் நடிகர் ராபர்ட் பேட்டின்சன். இந்த ட்வைலைட் சீரிஸ் படங்களை விரும்பதாவர் யாரும் இல்லை. இந்நிலையில் ராபர்ட் நிகழ்ச்சி ஒன்றில் ரகசியம் ஒன்றை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
 
நான் ஆபாச பத்திரிகைகளை திருடி பள்ளியில் விற்பனை செய்திருக்கிறேன். அதன் மூலம் எனக்கு நிறைய பணம் கிடைத்தது. நான் கடைக்கு பள்ளி சீருடையில் சென்று ஒன்று அல்லது இரண்டு ஆபாச பத்திரிகைகளை திருடி என் பைக்குள் போட்டுக்கொள்வேன். 
 
ஒருமுறை ஆபாச பத்திரிகை திருடும் போது மாட்டிக்கொண்டேன். உடனே கடைக்காரர் என் பள்ளியை தொடர்பு கொண்டு இதை தெரிவித்துவிட்டார். இதனால் என்னை பள்ளியில் இருந்து நீக்கிவிட்டனர் என்றார்.