வியாழன், 11 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 30 ஆகஸ்ட் 2016 (16:58 IST)

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் படத்தில் நடிக்கும் மலையாள நடிகர்

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் படத்தில் நடிக்கும் மலையாள நடிகர்
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தயாரிக்கும் படத்தில் டாம் க்ரூஸுடன் மலையாள நடிகர் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


 
 
மலையாளப் படங்களில் நடித்துவரும் வயதான நடிகர், சசி கலிங்கா. அவர் ஹாலிவுட் படத்தில் நடிக்கவிருப்பதாக ஏற்கனவே செய்தி உலவி வந்தது. இந்நிலையில் நடிகர் அஜு வர்க்கீஸ், சசி கலிங்கா ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தயாரிப்பில் டாம் க்ரூஸ் நடிக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாக சமூகவலைத்தளத்தில் குறிப்பிட்டார். அது கேரளாவில் தலைப்பு செய்தியானது.
 
அதனைத் தொடர்ந்து சசி கலிங்கா விளக்கம் அளித்துள்ளார். ஹாலிவுட் படம் ஒன்றில் நடிப்பது உண்மைதான். ஆனால், அது பற்றிய விவரங்களை வெளியிட எனக்கு அனுமதியில்லை என கூறியுள்ளார்.
 
ஆமா, தனுஷ் ஹாலிவுட் படத்தில் நடிப்பதாகச் சொன்னது என்னாச்சு?