திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 12 ஜனவரி 2023 (15:57 IST)

25 ஆண்டுகளை கடந்த காதல் காவியம்! – மீண்டும் டைட்டானிக் 3டியில் ரிலீஸ்!

Titanic
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் ஹாலிவுட்டில் வெளியாகி நீங்கா காதல் காவியமாக பதிவான டைட்டானிக் படம் 25 ஆண்டுகள் நிறைவுற்றதையொட்டி மீண்டும் ரிலீஸாக உள்ளது.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் லியானார்டோ டி காப்ரியோ, கேட் வின்ஸ்லெட் நடித்து 1997ல் வெளியான படம் டைட்டானிக். 1912ல் வடக்கு அட்லாண்டிக் கடலில் பனிப்பாறையில் மோதி மூழ்கிய டைட்டானிக் கப்பலின் விபத்தை மையப்படுத்தி, அதில் கற்பனை காதல் கதையை புகுத்தி படமாக்கினார் ஜேம்ஸ் கேமரூன்.

உலகம் முழுவதும் ஹிட் அடித்த டைட்டானிக் திரைப்படம் 9 ஆஸ்கர் விருதுகளை வென்றதுடன் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த காதல் திரைப்படமாகவும் உள்ளது. அந்த படத்தின் ஜாக்கும், ரோஸூம் மீண்டும் ரசிகர்களை சந்திக்க உள்ளனர்.

ஆம். டைட்டானிக் படம் வெளியாகி இந்த ஆண்டுடன் 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அதை கொண்டாடும் விதமாக மீண்டும் டைட்டானிக் படம் 4கே தரத்தில், 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி வெளியாகும் இந்த படத்தை காண ரசிகர்களிடையே ஆவல் எழுந்துள்ளது. இதற்கான புதிய போஸ்டரை பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Edit by Prasanth.K