வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 27 ஜனவரி 2023 (12:40 IST)

சூப்பர் பவருக்கு ஏத்த சூப்பர் ட்ராகன் வில்லி! – ஷஸாம் 2 தமிழ் ட்ரெய்லர்!

Shazam
ஹாலிவுட்டில் பிரபலமான டிசி காமிக்ஸ் சூப்பர் ஹீரோவான ஷஸாமின் இரண்டாம் பாக தமிழ் ட்ரெய்லர் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது.

டிசி காமிக்ஸ் சூப்பர்ஹீரோக்களை வைத்து வார்னர் ப்ரதர்ஸ் தொடர்ந்து பல படங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறது. அவ்வாறாக கடந்த ஆண்டு வெளியான டிசியின் ப்ளாக் ஆடம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து அடுத்து ஷஸாம் – 2 (Shazam Fury of the Gods) திரைப்படம் வெளியாக உள்ளது.

ஷஸாம் முதல் பாகம் 2019ல் வெளியாகி ஏற்கனவே ஹிட் அடித்த நிலையில் இரண்டாம் பாகத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ஷஸாம் 2 தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழி ட்ரெய்லர்களையும் வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.


இதில் கேம் ஆப் த்ரோன்ஸ் டெனேரியஸ் போல ட்ராகனையும், மந்திரகோலையும் கொண்ட ஒரு மூதாட்டி வில்லியாக வருகிறார். இந்த வில்லையையும், அவளது ட்ராகனையும் சிறுவன் பில்லி பேட்சனும் அவனது நண்பர்களும் எப்படி ஷஸாமாக மாறி வெல்கின்றனர் என்பதுதான் ஆக்‌ஷன் அட்வெஞ்சரான கதை. இந்த படம்

முதல் பாகம் போன்றே இரண்டாம் பாகத்தில் தமிழ் டப்பிங் நகைச்சுவையாக சிரிக்க வைக்கும் வகையில் உள்ளதால் சிறுவர்களையும், இளைஞர்களையும் இந்த படம் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷஸாம் ஃப்யூரி ஆப் காட்ஸ் படத்தின் தமிழ் ட்ரெய்லர் மார்ச் 17 ல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஷஸாம் ஃப்யூரி ஆப் காட்ஸ் படத்தின் தமிழ் ட்ரெய்லரை காண…