சில்லா சில்லா சில்லா… ஃபாரின்ல நல்ல கல்லா – குஷி மூடில் அஜித்!
துணிவு திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ள நிலையில் அஜித் மகிழ்ச்சியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அஜித்தின் துணிவு திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக அஜித்துக்கு தமிழ்நாடு தவிர வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் மார்க்கெட் என்ற விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
வெளிநாடுகளில் இதுவரை அஜித் படங்கள் செய்யாத வசூல் சாதனையை துணிவு திரைப்படம் வசூலித்துள்ளதாம். இந்த செய்தி கேட்டு அஜித் மிகவும் உற்சாகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த மிகப்பெரிய வெற்றிக்கு படத்தை வெளிநாடுகளில் வெளியிட்ட லைகா புரொடக்ஷன்ஸ் செய்த மிகப்பெரிய அளவிலான விளம்பரங்களும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. அஜித்தின் அடுத்த படத்தை லைகா நிறுவனம்தான் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.