1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 13 ஜூலை 2022 (17:55 IST)

’தி வாரியர்’ ரன்னிங் டைம் மற்றும் சென்சார் தகவல்கள்

the warrior
இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘தி வாரியர்’ திரைப்படம் ஜூலை 14-ஆம் தேதி வெளியாக உள்ளது 
 
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ள இந்தப் படத்தின் ரன்னிங் டைம் மட்டும் சென்சார் தகவல் தற்போது வெளியாகியுள்ளது
 
இந்த படம் ‘யூஏ’ சென்சார் சான்றிதழ் பெற்றுள்ளது என்பதும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 137 நிமிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சரியான அளவில் உள்ள ரன்னிங் டைம் இந்த படத்தின் வெற்றிக்கு காரணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
ராம் பொத்தினேனி ஹீரோவாக நடித்துள்ள இந்த திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ளார் என்பதும் மேலும் இந்த படத்தில் நதியா உள்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படம் லிங்குசாமியின் வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.