செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 7 ஜூலை 2022 (18:32 IST)

சாய்பல்லவியின் ‘கார்கி’ டிரைலர் ரிலீஸ்!

gargi
பிரபல நடிகை சாய் பல்லவி நடித்த கார்கி என்ற திரைப்படம் வரும் 15ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது
 
இரண்டு நிமிடங்களுக்கு மேல் ஓடும் இந்த டிரைலரில் சில காட்சிகள் ஆரம்பத்தில் ஜாலியாக இருந்தாலும் அதன் பிறகு சீரியசாக ஓடுகிறது. சாய்பாபாவின் தந்தை திடீரென போலீசாரால் கைது செய்யப்பட்டு அதன் பின் நடக்கும் காட்சிகள் விறுவிறுப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த திரைப்படத்தை நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கோவிந்த் வசந்தா இசையில் உருவாகிய இந்த படத்தை கௌதம் ராமச்சந்திரன் என்பவர் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது