திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By sinoj
Last Modified: வியாழன், 30 செப்டம்பர் 2021 (23:34 IST)

'ருத்ரதாண்டவம்'படத்திற்கு தடைவிதிக்க முடியாது- நீதிபதி உத்தரவு

கடந்த ஆண்டு வெளியான திரெளபதி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் மோகன் ஜி சத்ரியன் இம்முறையும் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் ருத்ரதாண்டவம் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் கிருஸ்தவர்களை தவறாக சித்தரிக்கும் வகையில் காட்சிகள் இருப்பதாக கூறி சாம் ஏசுதாஸ் என்பவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.அந்த மனுவில் சர்ச்சைக்குரிய காட்சிகளை படத்தில் இருந்து நீக்கும் வரை தடை விதிக்க வேண்டுமென கூறியிருந்தார்.
இந்நிலையில், படத்தின் டிரைலர் மட்டுமே ரிலீஸாகியுள்ள நிலையில், மனுதாரரின் கருத்து யூகத்தில் அடிப்படையில் உள்ளதாகவும் நாளைக்கு படம் ரிலீஸாகும் நிலையில் கடைசி நேரத்தில் மனுதாக்கல் செய்துள்ளதால் இப்படத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என நீதிபதி கூறினார்.