திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (14:21 IST)

கிராமி விருதை போட்டு உடைத்த பாடகி! – விழா மேடையில் பரபரப்பு!

Olivia rodrigo
உலகளவில் பிரபலமான இசைக்கு வழங்கப்படும் கிராமி விருதுகள் நிகழ்ச்சியில் இளம் பாடகி விருதை கீழே போட்டு உடைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக அளவில் இசைக்கான ஆஸ்கர் விருதாக கருதப்படுவது கிராமி விருதுகள். ராப், ஹிப் ஹாப், பாப், ராக் என பல வகை பாடல்களுக்கும், பாடகர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

நேற்று நடைபெற்ற கிராமி விருது விழாவில் இளம் பாடகியான ஒலிவியா ரொட்ரிகோ 7 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார். அதில் சிறந்த புதிய பாடகி, சிறந்த பாப் ஆல்பம் மற்றும் சிறந்த பாப் தனி பங்களிப்பு ஆகிய 3 பிரிவுகளில் ரோட்ரிகோ விருதை வாங்கு குவித்தார்.

பின்னர் விருதுகளுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும்போது ஒரு ட்ராபி தவறி கீழே விழுந்து உடைந்தது. இந்த சம்பவம் நிகழ்ச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. என்றாலும் கடந்த 2010 கிராமி விருதில் இதேபோல டெய்லர் ஸ்விப்ட் தனது விருது ட்ராபியை கீழே போட்டு உடைத்ததை சுட்டிக்காட்டிய சிலர் இதுகுறித்து நகைச்சுவையாக பதிவிட்டுள்ளனர்.