1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 31 மார்ச் 2022 (11:25 IST)

ஸ்மித்தை வெளியேற சொன்னோம்... ஆஸ்கர் அகாடமி தரும் விளக்கம்!

தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை, நடிகர் வில் ஸ்மித் கன்னத்தில் அறைந்தது தொடர்பாக ஆஸ்கர் அகாடமி விளக்கம் அளித்துள்ளது. 

 
94வது ஆஸ்கர் விருது விழா நேற்று நடந்த நிலையில் பல்வேறு பிரிவுகளில் பல படங்களுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்த நடிகர் வில் ஸ்மித்திற்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
 
அப்போது விழா மேடையில் பேசிய நகைச்சுவை நடிகரும், தொகுப்பாளருமான கிறிஸ் ராக், ஸ்மித்தின் மனைவி குறித்து உருவகேலி செய்யும் வகையில் ஜோக் அடித்ததால் ஆத்திரம் அடைந்த வில் ஸ்மித் மேடையேறி சென்று கிறிஸ்சை பளார் என அறைந்தார். இந்த சம்பவம் நேற்று முதலாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வில் ஸ்மித்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் பலர் கருத்துகளை பதிவிட்டனர். 
 
இதனைத்தொடர்ந்து தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்த வில் ஸ்மித் மீது ஆஸ்கர் நிர்வாகம்  விசாரணையை தொடங்கியது. இந்நிலையில் இதுகுறித்து ஆஸ்கர் அகாடமி தெரிவித்துள்ளதாவது, கிறிஸ் ராக்கை அறைந்த பின் நிகழ்ச்சியைவிட்டு வெளியேற வில் ஸ்மித்திடம் கோரினோம். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.
 
நாங்கள் இந்த சூழலை வேறு விதமாக கையாண்டிருக்கலாம் என்பதையும் ஒப்புக் கொள்கிறோம். அகாடமியின் நடத்தை விதிகளை மீறியதால் வில் ஸ்மித்தின் மீது ஒழுங்கு நடவடிக்கை விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏப்ரல் 18 ஆம் தேதி நடக்கும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.