வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 2 ஏப்ரல் 2022 (08:45 IST)

ஆஸ்கர் அமைப்பிலிருந்து நடிகர் வில் ஸ்மித் ராஜினாமா!

Academy of Motion Picture Arts and Science அமைப்பின் பதவியை ராஜினாமா செய்துள்ளார் நடிகர் வில் ஸ்மித். 

 
94வது ஆஸ்கர் விருது விழா நேற்று நடந்த நிலையில் பல்வேறு பிரிவுகளில் பல படங்களுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்த நடிகர் வில் ஸ்மித்திற்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
 
அப்போது விழா மேடையில் பேசிய நகைச்சுவை நடிகரும், தொகுப்பாளருமான கிறிஸ் ராக், ஸ்மித்தின் மனைவி குறித்து உருவகேலி செய்யும் வகையில் ஜோக் அடித்ததால் ஆத்திரம் அடைந்த வில் ஸ்மித் மேடையேறி சென்று கிறிஸ்சை பளார் என அறைந்தார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வில் ஸ்மித்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் பலர் கருத்துகளை பதிவிட்டனர். 
 
இதனிடையே அகாடமியின் நடத்தை விதிகளை மீறியதால் வில் ஸ்மித்தின் மீது ஒழுங்கு நடவடிக்கை விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏப்ரல் 18 ஆம் தேதி நடக்கும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் ஆஸ்கார் அகாடமி கூறியிருந்தது.
 
இந்நிலையில் தற்போது Academy of Motion Picture Arts and Science அமைப்பின் பதவியை ராஜினாமா செய்துள்ளார் வில் ஸ்மித். கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படவிருந்த நிலையில் அவர் ராஜினாமா செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.