ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 3 ஜனவரி 2023 (10:20 IST)

பிரபல அவெஞ்சர்ஸ் பட நடிகர் கார் விபத்து! – உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை!

Hawk Eye
பிரபல ஹாலிவுட் நடிகர் கார் விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபலமான மார்வெல் சூப்பர்ஹீரோ படங்களில் ’ஹாக் ஐ’ என்ற சூப்பர் ஹீரோவாக நடித்தவர் ஜெரெமி ரென்னர். இவர் மிஷன் இம்பாசிபிள் உள்ளிட்ட மேலும் பல ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். நேற்று இரவு தனது வீட்டிற்கு காரில் சென்றுக் கொண்டிருந்த ஜெரெமி ரென்னர் எதிர்பாராத விதமாக விபத்துக்கு உள்ளாகியுள்ளார்.

கால்கள் முறிந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையை அவர் தாண்டி விட்டதாகவும், ஆனால் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐசியுவில் அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் பூரண நலம்பெற்று திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பிரார்தித்து வருகின்றனர்.

Edit By Prasanth.K