வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By
Last Modified: வெள்ளி, 3 ஆகஸ்ட் 2018 (13:27 IST)

டவுசரு பாண்டி நானு: புதுரக ஜீன்ஸ் பூட் அணிந்து வந்த ஹாலிவுட் நடிகை!

ஜெனிஃபர் லோபஸ் அணிந்து வந்த ஜீன்ஸ் பூட் டிசைன், சமூக வலைதளத்தில் தனிக்கவனத்தை பெற்று வருகிறது.



பல ஆண்டுகளாக உச்சத்தில் இருக்கும் பேஷன் ஐகான் பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லோபஸ். இவர் அண்மையில் அணிந்து வந்த புது ரக பே‌ஷன் ஆடை சமூக வலைத்தளங்களில் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளது.

அந்த ஆடையில் ஜெனிஃபர் இருக்கும் புகைப்படத்தில் அவர் சட்டை மட்டும் போட்டுக்கொண்டு ஜீன்ஸ் துணியை முழங்கால் அளவுக்கு ஷூபோன்று மாற்றி அணிந்து வந்து இருந்தார். இந்த ஆடையை பார்த்த ரசிகர்கள் மத்தியில் பரபரப்பும் ஆச்சரியமும் ஏற்பட்டது. அதை செல்போனில் படம்பிடித்து இணையதளத்தில் பரப்பி வருகிறார்கள்.



இந்த புகைப்படத்தை மிமிக் செய்வது போல் இந்திய இளைஞர்கள் தங்கள் கால் சட்டையை கழட்டி இறக்கிவிட்டு போஸ் கொடுத்து படங்கள் எடுத்துள்ளனர். மீம்களாக அப்படம் இணையத்தில் வலம் வந்துக்கொண்டிருக்கின்றன.

ஜெனிபர் தன் கால்சட்டை கழன்றது கூட தெரியாமல் நடந்து வருகிறார் என கமென்ட் செய்து நகைக்கிறார்கள். மேலும் சிலர் அந்த ஜீன்ஸ் பூட் ரகம் எங்கு கிடைக்கும் என விசாரிக்கின்றனர். வைரல் ஆனதை பார்த்தால் விரைவில் இந்தியாவிற்கும் வந்து விடும் போல் இந்த புது பேஷன் ஆடை. இனி பேண்ட்  கழன்றாலும் அது பேஷன் தான் என்பதற்கு உதாரணம் இந்த ஆடை டிசைன்.