கருணாநிதி உடல்நிலை குறித்த செய்தி கேட்டு திமுக தொண்டர் மாரடைப்பால் மரணம்

Last Modified சனி, 28 ஜூலை 2018 (12:38 IST)
தலைவர் கருணாநிதியின் உடல்நிலை வயது மூப்பு காரணமாக நலிவு அடைந்திருப்பதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டதில் இருந்தே திமுக தொண்டர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். கருணாநிதியின் மீது அளவுகடந்த பாசம் வைத்துள்ள திமுக தொண்டர்கள் அவருடைய வீட்டின் முன்பும், காவேரி மருத்துவமனை முன்பும் கூடியுள்ளனர். மேலும் அவர் விரைவில் குணமாகி மீண்டும் சிம்மக்குரலில் பேச வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து பல்வேறு விதமாக செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பதை கேட்ட திமுக நிர்வாகி ஒருவர் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முத்துப்பேட்டை என்ற பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகி தமீம் என்பவர் இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவர் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து திமுக நிர்வாகிகளிடம் கேட்டறிந்ததாகவும், கருணாநிதியின் உடல்நிலை மோசமாகியிருப்பதாக கேள்விப்பட்டதும் அந்த அதிர்ச்சியில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாகவும் அவருடைய உறவினர்கள் கூறியுள்ளனர். 50 வயதான தமீமின் மரணம் அந்த பகுதியில் உள்ளவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :