திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By
Last Modified: செவ்வாய், 23 ஜூலை 2019 (16:40 IST)

நீ சொன்ன பொய், நான் ஆனேன் பேய் – குலைநடுங்க வைக்கும் இட்-2 தமிழ் ட்ரெய்லர்

பிரபல ஹாலிவுட் பேய் படமான இட் படத்தின் இரண்டாம் பாகத்தின் தமிழ் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

2017ஆம் ஆண்டு வெளியாகி உலகமெல்லாம் பெரும் வசூல் சாதனையை படைத்த ஹாலிவுட் த்ரில்லர் படம் “இட்”. பிரபல நாவலாசிரியர் ஸ்டீபன் கிங் எழுதிய நாவலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது இந்த படம். வெறும் 3.5 கோடி டாலர்கள் செலவில் உருவான இந்த படம் 70கோடி டாலர்கள் வசூலித்தது.

அமெரிக்காவில் உள்ள ஒரு கிராமப்பகுதி பல மர்மங்கள் நிறைந்தது. 27 வருடங்களுக்கு ஒருமுறை அங்கே குழந்தைகள் மர்மமான முறையில் காணாமல் போய்விடுகிறார்கள். 1988ல் மீண்டும் அதேபோல குழந்தைகள் காணாமல் போக ஆரம்பிக்கிறார்கள். அந்த மர்மத்தை கண்டுபிடிக்க 5 சிறுவர்கள் முயற்சிக்கிறார்கள். அப்போதுதான் அந்த குழந்தைகளை கொண்டு போவது ”பென்னிவைஸ்” என்ற கோமாளி உருவம் கொண்ட பேய் என்று தெரிய வருகிறது. அந்த பேய் குழந்தைகள் கண்களுக்கு மட்டுமே தெரியும். அதை எப்படி அந்த 5 சிறுவர்களும் அழித்தார்கள் என்பதே இட் முதல் பாகத்தின் கதை.

மீண்டும் 27 வருடங்கள் கழித்து மீண்டும் அந்த பேய் வருவதாக இட் இரண்டாம் பாகம் தொடங்குகிறது. அந்த 5 சிறுவர்களும் இதில் வளர்ந்து பெரியவர்களாக இருக்கின்றனர். ஆனால் பென்னிவைஸ் அவர்களை பழிவாங்குவதற்காக மீண்டும் வந்திருக்கிறதா? அல்லது மறுபடியும் குழந்தைகளை கொல்ல போகிறதா? என பல கேள்விகளை எழுப்பியுள்ளது சமீபத்திய ட்ரெய்லர்.

ஜேம்ஸ் மெக்கோவி இதில் நாயகனாக நடித்துள்ளார். போன திரைப்படத்தில் பென்னிவைசாக நடித்த பில் ஸ்கேர்ஸ்கார்ட் இதிலும் நடித்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது.