1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
  4. Director Mohan G Attacks Suriya: "First Get a Hit in Theatres"

தியேட்டர்ல்ல ஒரு ஹிட் கொடுக்க தெரியல, என்ன கிண்டல் பண்ண வந்துட்டாங்க.. சூர்யா ரசிகர்களை பொளந்த மோகன் ஜி

மோகன்.ஜி
இயக்குநர் மோகன். ஜி நடிகர் சூர்யாவை கடுமையாக விமர்சித்துப் பேசியது, அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மோகன். ஜி தற்போது நடிகர் ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் திரௌபதி-2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். ரிச்சர்ட் ரிஷியின் பிறந்தநாள் அன்று படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டார்.
 
இந்த போஸ்டரை கண்ட சூர்யாவின் ரசிகர் ஒருவர், "யாருய்யா ராஜமௌலி? தமிழ் சினிமாவின் முதல் ₹1000 கோடி திரைப்படம் வருது," என்று கிண்டல் செய்யும் தொனியில் கருத்து தெரிவித்தார்.
 
இதற்கு பதிலளித்த மோகன். ஜி, சூர்யாவை குறிவைத்து, "தியேட்டர்ல ஒரு ஹிட் கொடுங்கடா முதல்ல... அப்பறம் என்னைக் கிண்டல் பண்ணலாம்... வெளியீட்டுத் தேதி சொல்லுங்கடா முதல்ல..." என்று காட்டமாக விமர்சித்தார்.
 
சமீபகாலமாக சூர்யாவின் சில படங்கள் திரையரங்குகளை தவிர்த்து நேரடியாக ஓ.டி.டி. தளங்களில் வெளியானதும், திரையரங்குகளில் வெளியான படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாததும் மோகன். ஜி-யின் விமர்சனத்திற்கு காரணமாக இருக்கலாம்.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
இரண்டாவது சிம்ஃபொனியை எழுதவுள்ளேன்… தீபாவளி நாளில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இசைஞானி!