ஞாயிறு, 19 ஏப்ரல் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 18 டிசம்பர் 2025 (11:20 IST)

15 நிமிஷத்துல எல்லா பாடலையும் போட்டுக் கொடுத்த இளையராஜா.. எந்தப் படம் தெரியுமா?

15 நிமிஷத்துல எல்லா பாடலையும் போட்டுக் கொடுத்த இளையராஜா.. எந்தப் படம் தெரியுமா?
1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்குள் இசை அமைப்பாளராக அடி எடுத்து வைத்தவர் இளையராஜா. அந்தப் படத்தில் அன்னக்கிளி உன்னைத் தேடுதே, மச்சானை பாத்தீங்களா போன்ற பாடல்கள் இன்று வரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற பாடலாகவே அமைந்து வருகிறது. அப்படி தொடங்கிய அவருடைய சினிமா கெரியர் இன்று வானுலக விரிந்து பரந்து காணப்படுகின்றது.

 எண்ணற்ற விருதுகள் எத்தனையோ பெருமைகள் இனி இவரை போல இசையில் பெரிய சாதனையை படைக்க முடியுமா என்பது தான் அனைவரின் கேள்வியாகவும் இருக்கிறது.எத்தனையோ இசையமைப்பாளர்கள் வந்தாலும் இளையராஜாவை போல வருமா என்றுதான் கேட்கிறார்கள். அதாவது அவரது இசை ஞானத்தை வைத்து பேசுகிறார்கள். ஆரம்பத்தில் நாடகம் கச்சேரிகளில் தன் அண்ணனுடன் பாடி வந்த இளையராஜா அதன் பிறகு தான் சங்கீதம் கற்க தொடங்கினார்.
 
 ஓரளவுக்கு ராகங்கள் பற்றி தெரிகிறது என்றால் அதற்கு காரணம் என்னுடைய அண்ணன் தான் என அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அவரைப் பற்றி பல விமர்சனங்கள் வந்தாலும் அவருடைய திறமைக்கு ஈடு இணை எதுவுமே இல்லை என்பது தான் உண்மை. இத்தனை பெருமைக்கும் புகழுக்கும் சொந்தக்காரராக இருக்கக்கூடிய இளையராஜாவுக்கு இருக்கக்கூடிய திமிரு நியாயம் தானே? கர்வம் நியாயம் தானே என்று தான் அனைவரும் கூறி வருகின்றனர்.
 
 அப்போதைய காலகட்டத்தில் அவருடைய பாடலை வாங்குவதற்கு பல இயக்குனர்கள் வரிசை கட்டி நின்று கொண்டிருப்பார்கள். அத்தனை பேருக்கும் பொறுமையாக இசையமைத்து பாடல்களை கொடுத்து அனுப்புவார். அப்படி ஒரு நாளில் ஐந்து பாடலையும் கொடுத்துவிட்டார், 6 மணி நேரத்தில் ஆறு பாடலையும் கொடுத்து விட்டார் என்றெல்லாம் அவருடைய திறமையை சிலாகித்து பேசியவர்கள் ஏராளம்.
 
 ஆனால் 15 நிமிடத்தில் ஒரு படத்திற்கு மொத்த பாடலையும் கொடுத்துவிட்டார் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அது உண்மை. பிரபல சினிமா தயாரிப்பாளர் கே ஆர் இளையராஜாவை பற்றி கூறும்பொழுது ஆவாரம்பூ படத்திற்கு அத்தனை பாடல்களையும் 15 நிமிடத்தில் கொடுத்துவிட்டார் இளையராஜா என பெருமையாக கூறியுள்ளார். அந்த படத்தில் அமைந்த அத்தனை பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்  என்பதும் குறிப்பிடத்தக்கது.