திங்கள், 26 பிப்ரவரி 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 9 மே 2023 (09:06 IST)

Fast & Furious எல்லா படத்தையும் பார்த்தா ரூ.80 ஆயிரம் பரிசு! – அசத்தல் அறிவிப்பு!

பிரபல ஹாலிவுட் படமான Fast & Furious-ன் அனைத்து பாகங்களையும் பார்த்தால் ரூ.80 ஆயிரம் பரிசு என வலைதளம் ஒன்று அறிவித்துள்ளது.

பிரபல ஹாலிவுட் நடிகர் வின் டீசல், பால் வாக்கர் இணைந்து நடித்து 2011ல் வெளியான படம் Fast & Furious. இதன் முதல் பாகம் ஹிட் அடித்த நிலையில் அடுத்தடுத்து இதன் வரிசை படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதுவரை 9 பாகங்கள் வெளியாகியுள்ள இந்த படத்தின் “Fast X” என்னும் 10வது பாகம் இந்த ஆண்டு வெளியாகிறது.

உலகம் முழுவதும் பிரபலமான இந்த Fast & Furious –ன் 10 படங்களையும் முழுவதுமாக பார்ப்பவர்களுக்கு ஆயிரம் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.80 ஆயிரம்) பரிசாக அளிப்பதாக FinanceBuzz என்ற வலைதளம் அறிவித்துள்ளது. போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் Fast & Furiousன் இதுவரை வெளியான 9 பாகங்களையும் அடுத்து வெளியாக உள்ள 10வது பாகத்தையும் முழுவதுமாக பார்த்து அதில் இடம்பெற்றுள்ள கார் வகைகள், ஆக்‌ஷன் காட்சிகளில் கார் எந்தளவு சேதமடைகிறது, எத்தனை விபத்துக்கள் நடக்கின்றன என்பதை சொல்ல வேண்டுமாம்.

படங்களை அதிகாரப்பூர்வமான ஓடிடிக்கள் வழியாக மட்டுமே பார்க்க வேண்டும் என கூறியுள்ள அந்நிறுவனம் அமெரிக்க குடிமக்கள் மட்டுமே இதில் கலந்து கொள்ள முடியும் என கூறியுள்ளதாம்.

Edit by Prasanth.K