ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 25 பிப்ரவரி 2023 (22:33 IST)

தைவானில் சுற்றுலாப் பயணிகளுக்கு ரொக்க பணம் பரிசு!

தைவான் நாட்டில் சுற்றுலாப் பயணிகளுக்கு ரூ.13 ஆயிரம் மதிப்பிலான பரிசு வழங்க தைவான் அரசு முடிவெடுத்துள்ளது.

தைவான்  நாட்டில் அதிபர் சாய் இங் வென் தலைமையிலான குடியரசின் ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு சுற்றுலாப் பயணிகளை கவர  பல புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

அதன்படி, தைவான் நாட்டிற்கு சுற்றுலாவுக்கு வரும் சுமார் 5 லட்சம் பேருக்கு பணம் அல்லது ஊக்கத்தொகை வழங்க தைவான் அரசு முடிவெடுத்துள்ளது.

அதன்படி, இந்த வரும் மொத்தம் 60 லட்சம்  சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும், இந்த எண்ணிக்கையை வரும் ஆண்டுகளில் அதிகப்படுத்தவும் முடிவெடுத்துள்ளது.

மேலும், இந்த ஆண்டில் சுற்றுலா வரும் 5 லட்சம் சுற்றுலாப் பயணிகளுக்கு தலா ரூ.13 ஆயிரத்து 600  பணமாக வழங்கவுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.