இது வெறும் அழைப்பில்லை… எச்சரிக்கை..! – 1 கோடி பார்வையாளர்களை கடந்த பேட்மேன் ட்ரெய்லர்!
வார்னர் ப்ரதர்ஸ் தயாரித்து அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகவுள்ள பேட்மேன் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள சூப்பர் ஹீரோக்களில் முதலிடத்தில் உள்ளவர் பேட்மேன். எந்த விதமான சூப்பர் பவரும் இல்லாதபோதும் தனது தொழில்நுட்பத்தால் குற்றங்களை தடுத்து பேட்மேனாக வலம் வரும் ப்ரூஸ் வெயினுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் பேட்மேன் ஆரிஜின் குறித்து பல காலக்கட்டங்களில் வெவ்வேறு படங்கள் வெளியாகியுள்ளன. அதில் க்றிஸ்டோபர் நோலனின் டார்க் நைட் ட்ரைலாஜி பிரபலமானது. இந்நிலையில் தற்போது மேட் ரீவ்ஸ் இயக்கத்தில் மீண்டும் பேட்மேன் ஆரிஜின் குறித்த படத்தை வார்னர் ப்ரதர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் பேட்மேனாக ராபர்ட் பேட்டின்சன் நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது டிசி பேண்டம் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட நிலையில் 24 மணி நேரத்திற்குள்ளாக ஒரு கோடி பார்வையாளர்களை நெருங்கியுள்ளதுடன், சமூக வலைதளங்களிலும் ட்ரெண்டாகியுள்ளது.