1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 10 ஜனவரி 2023 (13:56 IST)

இனி Antman தமாஸ் ஹீரோ இல்ல.. மாஸ் ஹீரோ! – பட்டையை கிளப்பும் Quantumania ட்ரெய்லர்!

Quantumania Trailer
மார்வெலின் பிரபல சூப்பர்ஹீரோவான ஆண்ட்மேன் படத்தின் குவாண்டமேனியா தமிழ் ட்ரெய்லர் தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.

மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் புகழ்பெற்ற சூப்பர்ஹீரோக்களில் ஒருவர் ஆண்ட்மேன் (Ant man). இவரால் எறும்பு அளவு குட்டியாகவும் மாற முடியும், ஒரு கட்டிடம் அளவிற்கு பெரிதாகவும் ஆக முடியும். இந்த ஆண்ட் மேன் சூப்பர் ஹீரோவுக்கு இதுவரை Antman, Antman and the Wasp என்ற இரண்டு படங்கள் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தில் குவாண்டமிற்குள் சென்று வந்த ஸ்காட் லாங் (ஆண்ட்மேன்) காலப்பயணம் குறித்து கண்டுபிடித்து தானோசை வீழ்த்தி மறைந்தவர்களை மீட்க உதவுவார். ஆனால் குவாண்டத்திற்குள் சிக்கியதால் 5 நிமிடத்திற்கு 5 ஆண்டுகளை கடந்துவிடுகிறார். இதனால் அவரது குட்டிப்பெண் ஸ்டேசி கூட பெரிய பெண்ணாகி விடுகிறாள்.

Quantumania


தற்போது அந்த குவாண்டம் ரியாலிட்டியில் வாழும் காங் என்ற வில்லன் ஸ்டேசியை பிணையாக வைத்து ஆண்ட்மேனை ஒரு விஷயம் செய்ய சொல்கிறான். அதை செய்தால் அவர் இழந்த காலத்தை திரும்ப தருவதாக சொல்கிறான். காங்கின் சூழ்ச்சி என்ன? அவன் சொன்னதை ஆண்ட்மேன் செய்தானா? அந்த திட்டம் என்ன? எப்படி தன் மகளை காப்பாற்றினார் என்பதை அதிரடி ஆக்‌ஷனுடன் சொல்கிறது ‘ஆண்ட்மேன் அண்ட் வாஸ்ப் குவாண்டமேனியா’

இதுவரை நகைச்சுவை செய்யும் சூப்பர்ஹீரோவாக இருந்த ஆண்ட்மேன் இந்த படம் மூலம் உணர்ச்சிகரமான தந்தையாக மாறியுள்ளார். பிப்ரவரி 17ம் தேதி பல மொழிகளில் வெளியாக உள்ள Antman and the wasp Quantumania படத்தின் தமிழ் ட்ரெய்லரை இங்கே காணலாம்.

Edit By Prasanth.K