1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 29 டிசம்பர் 2022 (16:47 IST)

தட்டிவிட்டா தாருமாறு.. அயர்ன்மேன் திரும்ப வறாரு! – மகிழ்ச்சியில் மார்வெல் ரசிகர்கள்!

Ironman
மார்வெல் ரசிகர்களின் விருப்பமான சூப்பர்ஹீரோவான அயர்ன்மேன் மீண்டும் படங்களில் தோன்ற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் சூப்பர்ஹீரோ படங்களால் புகழ்பெற்றுள்ள நிறுவனம் மார்வெல் ஸ்டுடியோஸ். மார்வெலில் ஸ்பைடர்மேன், தோர், ஹல்க் என பல சூப்பர்ஹீரோ கதாப்பாத்திரங்கள் இருந்தாலும் அதில் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் அயர்ன்மேன்.

டோனி ஸ்டார்க் என்னும் பணக்காரர் கவச உடை அணிந்து அயர்ன்மேனாக செய்யும் சாகசங்கள் ரசிகர்களிடையே பிரபலம். புகழ்பெற்ற அயர்ன்மேன் கதாப்பாத்திரத்தில் ராபர்ட் டோனி ஜூனியர் நடித்திருந்தார். கடந்த 2019ல் வெளியான அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் படத்தில் தானோஸை அழிப்பதற்காகவும், உலகத்தை காப்பாற்றுவதற்காகவும் அயர்ன்மேன் இறப்பதாக காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அயர்ன் மேனின் இழப்பு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

அதை தொடர்ந்து வந்த மற்ற படங்களில் அயர்ன்மேன் கேமியோ ரோலாவது வரமாட்டாரா என ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருந்தனர். அந்த ஏக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க உள்ளது மார்வெல். ஆம் அயர்ன்மேன் மீண்டும் படங்களில் தோன்ற உள்ளார்.

2026ல் வெளியாகவுள்ள அவெஞ்சர்ஸ் சீக்ரெட் வார்ஸ் படத்தில் அயர்ன்மேன் கேரக்டர் மீண்டும் தோன்ற உள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ஆர்மர் வார்ஸில் கேமியோ ரோலில் தோன்ற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி மார்வெல் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.